உன்னோடுதான் காதல் கொண்டேன்
விழியோடுதான் நீரோ! என்றேன்
என்னுயிரே நீ எங்கே போனாய்!
நீயின்றி ஆனதென் வாழ்வும் வீணாய்!
நெடு தூரத்தில் நீயும் அங்கே
உன் நினைவில் நானும் இங்கே
உந்தன் நினைவால் கலங்கும் நெஞ்சம்
நான் எங்கு செல்வேன் தஞ்சம்
என்னை வதைப்பது உண்மையில் சரியா!
மறந்தாலோ! ஆகுமோ அது முறையா?
தவிக்கின்றேன்! நான் தவிக்கின்றேன்!
செய்தறியாது துடிக்கின்றேன்!
பலவகை எண்ணி மனதும்
அஞ்சும்! அஞ்சும்!
நினைவில் உன்முகம் வந்து
கொஞ்சும்!கொஞ்சும்!
கனவில் சிலமுறை எல்லை
மிஞ்சும்! மிஞ்சும்!
காதல் ஆகுமோ கொடிய
நஞ்சாய் என்றும்!?
விடைசொல்ல வருவாயா?
நல்வாழ்வை எனக்குத் தருவாயா?
என்னுடனே இருப்பாயா? – நான்
சாகும்வரை என்னவளாய் இருப்பாயா?...
No comments:
Post a Comment