திலீபன் பகுத்தறிவு
Sunday, 4 September 2016
அந்த அந்தியில்
ஆயிரம் இன்பங்களாய்
அவள் என்னருகில்தான்
அமர்ந்திருந்தாள்.
ஆயிரம் இன்பங்களாய்
அவள் என்னருகில்தான்
அமர்ந்திருந்தாள்.
தீந்தமிழால் தேனொழுக
பேசிய பச்சைக்கிளி அவளிடம்
முன்னொருவன் சொன்னபடி
பேச முயன்று நின்றேன்!
பேசிய பச்சைக்கிளி அவளிடம்
முன்னொருவன் சொன்னபடி
பேச முயன்று நின்றேன்!
என்ன பேச்சு வரவில்லையா
என நமட்டுச்சிரிப்புச் சிரித்தவள்
எல்லாவற்றையும் கேட்டவளாகவே
அமர்ந்திருந்தாள் - நான் நெருப்பானேன்
உராய்ந்தால் பற்றுவது இயல்புதானே!
என நமட்டுச்சிரிப்புச் சிரித்தவள்
எல்லாவற்றையும் கேட்டவளாகவே
அமர்ந்திருந்தாள் - நான் நெருப்பானேன்
உராய்ந்தால் பற்றுவது இயல்புதானே!
பஞ்சும் நெருப்புமென்றால் - இரண்டுமே
பற்றிக்கொண்டிருக்கும்
பற்றிக்கொண்டிருக்கும்
ஆழ அவள் மனதில் மூச்சடக்கி
மூழ்கி வந்தேன்; முத்துடன் வரவில்லை
அதனால் நான் முத்தமும் தரவில்லை.
மூழ்கி வந்தேன்; முத்துடன் வரவில்லை
அதனால் நான் முத்தமும் தரவில்லை.
மாலை சாய்ந்ததால்
பாவையை பிரிந்துவந்தேன்!
என் நாசியில் அவள்
வாசம் மட்டுமே சுமந்துவந்தேன்!
பாவையை பிரிந்துவந்தேன்!
என் நாசியில் அவள்
வாசம் மட்டுமே சுமந்துவந்தேன்!
ஞானப்பெண்ணவள் என்பதால்
ஞானியாக்கிவிடுவாளோ என்ற
அச்சமும் எனக்குண்டு, அஞ்சுவதற்கு
அஞ்சித்தானே ஆகவேண்டியிருக்கிறது.
ஞானியாக்கிவிடுவாளோ என்ற
அச்சமும் எனக்குண்டு, அஞ்சுவதற்கு
அஞ்சித்தானே ஆகவேண்டியிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)