ஓவியக்
கலையில் இல்லை சித்திரன்
ஒண்டமிழ்
வளர்த்ததால் பெருஞ் சித்திரன்!
வண்டமிழ்
வலிமையை பாட்டினில் காட்டி
வான்புகழ்
கண்ட தமிழ்ச் சுந்தரன்!
தமிழுணர்வை
பாட்டினில் ஏற்றிய பாவலரேறு!
தாழ்ந்தநிலை
மீட்டெடுத்த நற்றமிழர் பாரு!
இவர்
பெருமைக்கு ஈடாவோர் இங்காரு!
தமிழ்
தொண்டர்க்கே வாய்க்கும் அப்பேறு!
நாலெல்லாம்
நாட்டின் உயர்வுக்கு உழைத்தாய்
நாவலர்க்கும்
தனித்தமிழ் அறத்தினை உரைத்தாய்
தமிழீழ
நிலைகண்டு பலமுறை கொதித்தாய்
குள்ளநரிக்
கூட்டத்தின் வாலினை அறுத்தாய்
உனை
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
உனையே
போர் வாளாய் எடுக்கின்றேன்
தமிழ்
பகைவரை எந்நாளும் எதிர்கின்றேன்
தமிழ்க்கொடி
வானோச்சும் என்றே சூளுரைக்கின்றேன்.
No comments:
Post a Comment