Saturday, 31 January 2015

போர் மனம்

நெஞ்சே நெஞ்சே!
விரும்பாதே!
பெண்ணவள் பக்கம்
நெருங்காதே!

‘காதலினால் உயிர்
தோன்றும்’
என்ற கவிதையினால்
மாமதி நீயும்
இழக்காதே!

கடமை இருக்குது
ஏராளம்!
காதலிக்க உண்டோடா
நேரம்?

மனதில் ஏன் இந்த
போராட்டம்!
எரிமலை மனதில்
நீரோட்டம்!

கடமை புரிந்தால்
உலகுனை
பாராட்டும்!
சீராட்டும்!

நற்காதலோ
அமைந்தால்
வாழ்க்கை
அமுதூட்டும்!
கடமை முடித்து
மாபுகழீட்டும்!

No comments:

Post a Comment