Saturday, 31 January 2015

வித்திட்டோன் தமிழன்!

வித்திட்டோன் தமிழன்!
வித்தை அனைத்தும் - உலகிற்கு
வித்திட்டோன் தமிழன்!
நாகரென வாழ்ந்து வந்தான் நானிலத்தில்
நாகரிகம் இருந்ததே அவன் இடத்தில்
நஞ்சும் உண்பான் நண்பன் தந்தால்
நசுக்கிடுவான் பகை எதிர் நின்றால்

வஞ்சம் வாழ்வில் அறியார்
வஞ்ச வலைகளில் வீழ்ந்தார்!
வீழ்ந்தார் எழுந்தார் நன்றே
வஞ்சம் வீழ்ந்தது இன்றே!

தமிழா தமிழால் ஒன்றுபடு – தமிழ்
உணர்வால் நீயும் எழுந்துவிடு
தமிழர்னாம் என்றே பாடு – தமிழா
நம் திறத்துக் கெவர் ஈடு?

எவனுக் கிருந்தது நம் பேரு
நாம் திண்பதா பிச்சை சோறு
எதிரியை இன்றே ஒருகை பாரு
மறுமலர்ச்சி பாதையில் முன் னேறு

தமிழுண்டு நம்மோடு அறமுண்டு நூலோடு
மறமுண்டு மனதோடு புலியென்றே போராடு
காதல் கலையோடு புரட்சிக் கவிபாடு
வெற்றி நடைபோட்டு தமிழர் திறம்பாடு.

வாழ்க தமிழ்!            வாழ்க தமிழினம்!!
        வாழ்க வையம் நன்றே!!!


No comments:

Post a Comment