Saturday, 31 January 2015

தோழிக்கு...

செந்தமிழ் வாழி! செந்தமிழ் வாழி!
என்றே சொல்லிடு எந்தமிழ் தோழி!
செங்கதிர் கிளர்ந்தது திற விழி!
எத்திக்கும் உம்பகை உடைத் தெறி!

செந்தமிழ் நூலை தினமும் படி – அது
வாழ்விற்கு உதவும் ஏணிப் படி
பெரியார் கிழவனின் கைத் தடி - அதை
வாங்கி உலுத்தரை நீ அடி

தீந்தமிழ் ஓங்கி வளர்ந்திட வேண்டும்
பெண்ணே நீயின்று சிந்திக்க வேண்டும்
ஆரியப் புரட்டினை துறந்திட வேண்டும்
தமிழச்சி யாய்நீ வாழ வேண்டும்

பூவாய் இருந்த பெண்கள் எல்லாம்
புயலாய் புலியாய் மாற வேண்டும்
புலமை கொண்டு புவியை காக்க
புரட்சிக் கவிதைகள் போற்ற வேண்டும்

அறிஞர் கனவுகள் மெய்பட வேண்டும்!
நல்லதோர் சமுகம் மலர்ந்திட வேண்டும்!
பெண்ணே புரட்சி செய்திட வேண்டும்!
இன்றே பெண்கள் சூளுரைக்க வேண்டும்!

பெண் விடுதலை வேண்டும்!

மண் விடுதலை வேண்டும்!! என்றே!

No comments:

Post a Comment