நான்மறை வேண்டாம் வாழ்வினிலே
நல்ல பொதுமறை உண்டு தரணியிலே
நீ அதை கற்பாய் காலத்திலே – பின்
புரட்டுகள் ஓடும் தூரத்திலே
வள்ளுவன் வழங்கிய தேனமுது
அதுவே தமிழுக்கு என்றும் இனிது
பிறிவினை ஏதும் கூறாது
வாழ்வினை உயர்த்தும் ஏணியது
கொண்டது எழுசீர் தானே
பொருள் தருவதில் கடல் போலே
அறம் பொருள் இன்பம் மூன்றே
தந்திடும் அறிவுச் சுடரே
வள்ளூவன் வாக்கு வாழ்விற்கே
பெருமை யாவும் தமிழர்க்கே
பெற்றது வையம் பொதுமறையாய்
கொடை கொடுத்தது தமிழினம் மனநிறைவாய்.
No comments:
Post a Comment