பாவை
பார்வையாய் நானிருப்பேன் – என்றும்
பூவாய்
காலடி பூத்திருப்பேன்
மனக்கண்ணில்
காட்சிகள் காட்டுகிறேன் – உன்
கண்களுக்கும்
உயிர் ஊட்டுகிறேன்
கானல்
நீர்தான் வாழ்க்கை என்றால் – அங்கு
பார்வை
என்பதும் தேவையில்லை
காற்றை
பார்த்தவர் யாருமில்லை – இங்கு
கண்கள்
காண தூரமில்லை
நம்போல்
இங்கே கதிர்மதி இரண்டு
ஒன்றோடு
ஒன்று உறவாய் உண்டு
வளைவில்
புருவம் உன்னில் கண்டு
வளைந்தது
அங்கே வானவில் இன்று
(-பாவை)
ஆழ்கடல்
ஆழம் உன்மனமே - அதில்
ஆயிரம்
சிறகு முளைத்திடுமே
பெண்மையாய்
பூக்களும் பூத்திடுமே - செஞ்
சோலையில் இன்பம்
கூடிடுமே
(-காற்றை)
நுனிப்புல்லில்
இருக்கும் பனித்துளியும் – பிறை
நெற்றியில்
முகிழ்ந்த வியர்வையடி
சிறகுகள்
முளைத்த சிந்தனைபோல் – வான்
குடைக்குள்
பறவைகள் பறக்குதடி
(-கானல் 2வரி)
(-பாவை 2வரி)
கோடிகள்
உண்டு விந்தையடி – இன்று
உணர்ந்தாயா
நான் சொன்னபடி?
தமிழே
தந்தது சிந்தையடி – இங்கு
உன்போல்
யாரும் இல்லையடி!
(-பாவை
2வரி)
No comments:
Post a Comment