துன்பத்
தணலில்
துடிதுடிக்க
வைத்தே
சென்றுவிட்டார்!
மாமனிதர்
மண்டேலா!
மாணிக்கம்
மனிதருள்!
கருப்பினத்தை
காத்த
ஒரே
காவல்காரன்!
காரிருளில்
தனையின்று
கலந்துகொண்டான்!
சரித்திரத்தை
படைப்பவர்கள்
சிலரென்றால்!
சரித்திரத்தை
உடைப்பவர்கள்
வெகுசிலரே!
சாதி மத
வெறியை
வேரறுத்தார்
இங்கொரு
பெரியார்!
நிற இன
வெறியை
வேரறுத்த
நீயுமொரு
பெரியார்!
‘தென்
ஆப்பரிக்கப்
பெரியார்’!
துவக்கெடுத்து
துவக்கியவன்
நீயே!
உன்வழி
நடக்கும்
யாம்
– நின்
சேயே!
மனிதத்தை
காக்கவந்த
நீயும்
ஓர்
தாயே!
விடுதலை
உணர்வில்
நீயென்றும்
தீயே!
சிறைக்கு
வாழ்வை
இறையாக்கி
27 ஆண்டுகள்
உள்ளிருந்தாய்!
விடுதலை
பெற்றுவந்தும்
மா வீரமே!
சிறைபுகுந்தாய்!
மக்கள்
மனங்களிலே!
அமைதியின்
நோபல்
பரிசும்
கிடைத்தது
உனக்கு!
உன்னை
பெற்றதால்
பெற்றதே
நோபலும்
நன்மதிப்பு!
குத்துச்சண்டை
வேங்கை!
உலகறியும்
உன்போராட்ட
பாங்கை!
எமைவிட்டு
எங்கு
நீ
பிரிந்தின்று
போனாய்?
விதைத்த
எண்ணங்கள்
என்றுமே
போகாது
வீணாய்!
பெரியாரே!
95 ஆண்டுவரை
தொண்டு
செய்த
பெரியாரே!
நீ பிரிந்து
சென்றாலும்!
உன் வழியில்
நாங்கள்
செல்வோமே!
மானுடப்பகை
எல்லாம்
வென்று
- கீர்த்தி
கொள்வோமே!
No comments:
Post a Comment