உச்சநீதிமன்றத்
தடைகேட்டு
மகிழ்கிறோம்!
நாங்கள்
விலங்கு
நல
ஆர்வலர்கள்!
பழந்தமிழர்
பல நூறாண்டாய்
விழாவாய்
கண்ட
விளையாட்டு!
இனியில்லை
அவர்க்கு!
‘நீ-தீ’
மன்றம்
தடைபோட்டு!
சட்டப்படி
திட்டமிட்டே
தமிழர்
கலை
அழிப்போம்!
மேல்நாட்டு
கலைகளை
ஊக்குவிக்க!
‘டாக்’
ட்ரைனிங்க்
செய்தால்
– அது
ட்ரைனிங்க்!
‘ஆக்ச்’
ட்ரைனிங்க்
செய்தால்
– அது
க்ருயல்டி!
மிருகவதை
செய்வதனை
ஆர்வலர்
யாம்
அனுமதியோம்!
அசைவம்
என்பதற்கு
கொள்வது
வதையோ?!
சொன்னால்
மெய்யாய்
எமக்குவிழும்
உதையே!
உடனே
விடுவோம்
சட்டம்
காட்டி
கதையே!
எளியமக்கள்
விளையாட்டை
தடை செய்தோம்!
குதிரை
பந்தயம்
பற்றி
ஒருபோதும்
வாய்
திறவோம்!
மிருக
வதை!
மிருக
வதை!
என நாங்கள்
கொக்கரிப்போம்!
தோலெடுக்க
கூடாதென
பெண்கள்
தோல்
காட்டும்
புகைப்படத்தை
வலைதளத்தில்
பார்க்களையோ!
என்னே
எங்கள்
செயல்பாடு!
மனிதனைப்போல்
விலங்கிற்கும்
உரிமை
தர
வேண்டுகிறோம்!
இராணுவத்தில்
விலங்கிருக்க
வேடிக்கையே
பார்கின்றோம்!
பால்சுரக்கும்
பசு
தன் கன்றுக்கே
சுரக்கிறது!
மனிதரதை
திருடுகையில்
வதையென
கொள்வதுவோ?!
மிருகவதை
தடுப்பதுவே
எங்கள்
குறி!
எங்கள்
நெறி!
வெளிநாட்டு
நாய்
இருக்க
பாராட்டி
சீராட்டி
ஏன் வளர்த்தீர்?
காளைகளை!
என்பதல்ல
எம் எண்ணம்!
நாங்கள்
விலங்கு
நல
ஆர்வலர்கள்!
விலங்கு
நல
ஆர்வலர்கள்!
மிருக
வதை
தடுப்பதர்க்கே
ஏகாதிபத்திய
எச்சிலில்
(எண்ணத்தில்)
வாழ்பவர்கள்!
No comments:
Post a Comment