Monday, 18 August 2014

வாருங்கள் படையெடுப்போம்!

வாருங்கள்
தமிழர்களே!
முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றம்
வாருங்கள்!

பாருங்கள்!
உறவுகளே!
ஈழத்துயரை
கற்சிலையில்
பாருங்கள்!

உணர்வாளர்
வந்தனரே!
முற்றத்தை
சிறப்பித்துத்
தந்தனரே!

அறியாத
தமிழர்களே!
தமிழினத்தின்
மாத்துயரை
அறிந்து கொள்ள
தஞ்சைக்கு
வாருங்கள்!

வந்து
முள்ளிவாய்க்கால்
நினைவு
முற்றத்தை
பாருங்கள்!

பிஞ்சு உடல்
சிதைந்திருக்க!
பெண்ணின்
மார்பு
பிளந்திருக்க!

அம்மணமாய்
ஆண்கள்
சுடப்பட்டனரே!

உலகமே!
இந்நிலைக்கு
தமிழனை
விட்டனரே!

ஆடுவதைக்
கூடத்திலும்
ஒவ்வொன்றாய்
பலிகொடுப்போம்!

ஈழமண்ணில்
எம்தமிழரை
மொத்தமாய்
இழந்தோமே!

வாருங்கள்!
வந்து
பார்த்து
விட்டு
கூறுங்கள்!

என்ன குற்றம்
செய்தார்
தமிழர்? என்றே
கேளுங்கள்!
மனித இனத்தை
கேளுங்கள்!

சிறிலங்கம்!
சிங்கள இனவெறி
பௌத்த நாடே!

தமிழனுக்கு
இம்மியளவும்
வேண்டாம்
அதில் வீடே!

தமிழீழமண்
எங்கள் தாய்நாடே!
அதை மாற்றான்
மிதித்தால்
பொறுக்காது
எம்படைவீடே!

உயிராயுதம்
ஏந்தினார்
புலிநிகர்
மாவீரர்!

உடமையும்
உயிரையும்
இழந்தார்
முள்ளிவாய்க்காலில்
காரணம் அவர்
தமிழர்!

சர்வதேச
சமூகம்
விழித்ததே!

சிங்களன்
சிண்டை
பிடித்ததே!

பணிவானா
சிங்கள
இனவெறியன்!

இந்தியா
என்றுமே
அவன் பிரியன்!

சர்வதேச
சமூகமும் இன்று
மானுட நீதிக்கு
குறல் கொடுக்க!

தமிழனே!
இன்னும்
என்னடா
தயக்கம்
உனக்கு
படையெடுக்க!

(29.11.2013 சங்கொலி பக்கம்:14 ல் வெளிவந்த என் கவிதை)

No comments:

Post a Comment