Saturday, 31 January 2015

*****

கவிதை நானெழுதி
நாட்கள் பலவாச்சு!
தங்கத்தமிழ் நாடுமா
தரம்தாழ்ந்து போச்சு?

நாடெல்லாம் ஊரெல்லாம்
பெண்விடுதலை பேச்சு!
வெந்ததவள் உடல் பாரடா!
உன் அமிள வீச்சு!

ஈனப்பிறவியே! உன்னால்
ஆண்மையும் வெட்கப்படுகிறது!

தொடர் வன்கொடுமைகள்
பெண்ணுக்கு எதிராய்!
ஏன் என்று ஆய்கிறார்
இன்றும் அறிஞர் பலராய்!

உள்ள குறை காண்கிலார்
ஆளவந்தார்!
பகுத்தறிவூட்டுக வள்ளுவன்
வழியிலே!
சமூகம் மாறுமே
நன்னடையிலே!

பெண்களே!
ஆற்றல் கொண்டோரே!
சிறு பிள்ளைக்கும்
ஆணாதிக்க உணர்வினை
ஊட்டி வளர்த்தே
தவறிழைத்தீரே!

பிள்ளை வளர்ப்பதில்
கவனம் செலுத்துங்கள்!
பெண்களும் ஆண்களும்
ஒற்றுமை கொள்ளுங்கள்
காழ்ப்புணர்வின்றி!

நிச்சயம் ஒருநாள்
சமூகம் மாறும்!
விடியலும் அன்றே
இம்மண்ணில் பிறக்கும்!

No comments:

Post a Comment