Saturday, 31 January 2015

*******

தவறேதும் செய்யாமல் பழிகொண்டு விட்டேன்
       சோழர்குல மாண்பைக் காக்கிலேன் நான்!
எரிகின்ற நெஞ்சத்தில் சிறுகலக்கம் கொண்டேன்
       களங்கமும் கண்டேன் நான்! - செய்வதும்
அறியாமல் வினைச் செய்யவும் துணியாமல்
       எந்நிலை யென்றுநான் ஏங்கி நிற்கின்றேன்!
எதற்கும் அஞ்சா நெஞ்சினன் அஞ்சினேன்
       கடுவனாய் மனம் திரிதல் கண்டே!
கசடற கற்ற மாமதியின் எச்சங்கள்
       கண்முன் அழிகிறது; கனன்று எரிக்கிறது!
கடலினுள் மூழ்கிடவே தீப்பறவை விரும்பியது
       புத்தன் மொழியெலாம் இன்றே புரிகிறது!
கண்ணெதிர் கண்ட எழிலோ வியத்தை
       நெருங்கவே, பேரங்காரம் என்னை தடுக்கிறது!
கலங்கும் நெஞ்சம் வைரத்தால் அறுகிறது
       தூவல் ஒன்றேயென் துணையாய் நிற்கிறது!

No comments:

Post a Comment